மகர லக்னத்தில், சனியின் ராசியில் குரு நீசமடைகிறது. அதனால் இளம்வயதில் ஜாதகர் ஒல்லியாக இருப்பார். உடன் பிறந்தோருடனான உறவில் குறையிருக்கும். தைரியம் குறைவுபடும். செலவுகள் அதிகமாக உண்டாகும். பல கஷ்டங்கள் இருக்கும். வெளித் தொடர்புகளால் பிரச்சினை வரும். வியாபாரத்தில் சிறிய அளவில் லாபம் கிடைக்கும். சில நேரங்களில் நஷ்டமும் உண்டாகும்.
2-ஆம் பாவத்தில் கும்ப ராசியில் குரு இருந்தால் பணம் சேமிப்பதில் கஷ்டம் ஏற்படும். குடும்பத்தில் பல சிக்கல்கள் உருவாகும். செலவுகள் அதிகமாக ஏற்படும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும். வியாபாரத்தில் சுமாரான வெற்றி கிடைக்கும். பணி செய்யுமிடத்தில் சுமாரான வருமானம் இருக்கும்.
3-ஆம் பாவத்தில், சுயவீடான மீன ராசியில் குரு இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். உடன் பிறந்தோரால் சந்தோஷம் கிட்டும். செலவுகளைக் கட்டுப்பாட்டிற்குள் ஜாதகர் வைத்திருப்பார். வெளித் தொடர்புகளில் பாராட்டு கிடைக்கும். ஜாதகர் ஓரளவு சுமாரான வாழ்க்கை வாழ்வார்.
4-ஆம் பாவத்தில் செவ்வாயின் மேஷ ராசியில், நண்பரின் வீட்டில் குரு இருந்தால் அன்னையுடன் சுமாரான உறவே இருக்கும். சொந்தமாக வீடு அமைவதில் பிரச்சினை ஏற்படும். உடன்பிறந்தோருடனான உறவில் குறையிருக்கும். செலவுகள் அதிகமாக உண்டாகும். வெளித்தொடர்புகள் நன்றாக இருக்கும். அதனால் ஜாதகர் வீட்டில் அமர்ந்துகொண்டே பணம் சம்பாதிப்பார்.
5-ஆம் பாவத்தில் சுக்கிரனின் ரிஷப ராசியில் குரு இருந்தால் குழந்தைகளால் பிரச்சினைகள் ஏற்படும். படிப்பு விஷயத்தில் தடைகள் உண்டாகும். பணத்தை செலவழிப் பதற்கு அதிகமாக யோசனை தோன்றும். உடன்பிறந்தோருடன் சுமாரான உறவே இருக்கும். ஜாதகர் தன் சுய அறிவைப் பயன்படுத்தி, கடுமையாக உழைத்து தைரியமாக வாழ்வார்.
6-ஆம் பாவத்தில் புதனின் மிதுன ராசியில் குரு இருந்தால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஜாதகர் கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார். அவரைப் பார்த்துப் பலரும் பயப்படுவார்கள். ஆனால் அவரின் மனதில் தைரியம் குறைவாக இருக்கும். கடுமையாக உழைத்து, பல சிரமங்களைக் கடந்து ஜாதகர் வாழ்க்கை நடத்துவார்.
7-ஆம் பாவத்தில் சந்திரனின் கடக ராசியில் குரு பகவான் உச்சமடைகிறார். அதனால் ஜாதகருக்கு அழகான மனைவி வாய்ப்பாள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். செலவுகள் அதிகமாக உண்டாகும். வெளித் தொடர்புகளின்மூலம் பெயர், புகழ் கிடைக்கும். ஜாதகர் சுமாரான தோற்றத்தைக் கொண்டிருப்பார். மனதில் பல சிந்தனைகள் தோன்றும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரும்.
8-ஆம் பாவத்தில் சூரியனின் சிம்ம ராசியில் குரு இருந்தால் நோயின் பாதிப்பிருக்கும். பூர்வீக சொத்து கிடைப்பதில் தடைகள் ஏற்படும். மூலநோய் வரலாம். ஜாதகர் சுமாரான வெற்றிகளுடன் வாழ்வார்.
9-ஆம் பாவத்தில் புதனின் கன்னி ராசியில் குரு இருந்தால் தந்தையுடன் ஜாதகருக்கு சுமாரான உறவிருக்கும். வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். தர்ம சிந்தனை குறைவாக இருக்கும். வெளித் தொடர்புகளின்மூலம் பணவரவுண்டு. உடல்நலத்தில் குறையிருக்கும். மனதில் அமைதி இருக்காது. சுய அறிவைப் பயன்படுத்தி ஜாதகர் தன் எதிரிகளை வெல்வார். நீதிமன்றம், வழக்கு ஆகிய விஷயங்களில் சில நேரங் களில் வெற்றியும், சில நேரங்களில் தோல்வியும் கிடைக்கும்.
10-ஆம் பாவத்தில் சுக்கிரனின் துலா ராசியில் குரு இருந்தால் ஜாதகருக்கு தந்தையுடனான உறவில் குறையிருக்கும்.
அரசாங்க விஷயங்களில் பிரச்சினைகள் ஏற்படும். உடன்பிறந்தோருடனான உறவில் சந்தோஷம் நிலவும். மனதில் தைரியம் இருக்கும். ஜாதகர் ஆடம்பரமான வாழ்க்கையை நடத்துவார். வெளித் தொடர்புகளில் லாபம் கிடைக்கும். ஜாதகர் தன் அறிவைப் பயன்படுத்தி பகைவர்களை வெல்வார்.
11-ஆம் பாவத்தில் செவ்வாயின் விருச்சிக ராசியில் குரு இருந்தால் நல்ல பண வரவிருக்கும். குரு 12-ஆம் பாவத்திற்கு அதிபதியாக இருப்பதால், செலவுகள் அதிகமாக உண்டாகும். அதனால்,சில நேரங்களில் ஜாதகர் சிக்கலில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். வெளியே தன்னை பணக்காரராகவும் ராஜாவாகவும் ஜாதகர் காட்டிக்கொள்வார். வியாபாரத்திலும் இல்வாழ்க்கையிலும் வெற்றி கிடைக்கும். பெண்ணால் சந்தோஷமுண்டு.
12-ஆம் பாவத்தில், தன் சுய ராசியான தனுசு ராசியில் குரு இருந்தால் அதிக செலவுகள் உண்டாகும். வெளித் தொடர்புகளின்மூலம் பணம் வரும். உடன்பிறந்தோருடன் சுமாரான உறவே இருக்கும். தைரியம் குறைவுபடும். பல கில்லாடி வேலைகளைச் செய்து ஜாதகர் பணம் சம்பாதிப்பார். ஆடம்பரமான வாழ்க்கை வாழ்வார்.
செல்: 98401 11534